ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
நந்தீஸ்வரரை வழிபட்டு நலம் காண வேண்டிய நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். உடன்பிறப்புகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
செல்வ வளம் உயர சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். நிச்சயித்த காரியம் ஒன்றை நிச்சயித்தபடியே செய்து முடிப்பீர்கள். தொழிலில் திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.
குடும்பப் பொறுப்புகள் கூடும் நாள். வருவாய் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக்காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம். பயணங்களால் பலன் உண்டு.
எம்பெருமான் வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் பங்குதாரர்களை மாற்றும் சூழ்நிலை உருவாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
நந்தி வழிபாட்டால் நன்மைகளைக் காண வேண்டிய நாள். நடக்காத ஒன்றை நினைத்துக் கவலைப்படுவீர்கள். குடும்ப பிரச்சினைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
நன்மைகள் நாடிவர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கனவுகள் நனவாக காளை வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். காலை நேரம் கனிவான செய்திகள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும்.
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதிற்கு இதமான செய்தியொன்று வந்து சேரலாம். விலகிப் போன கல்யாணப் பேச்சுக்கள் மீண்டும் வந்து சேரலாம்.
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லத்தில் அமைதி கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் வளர்ச்சியுண்டு. ஆரோக்கியம் சீராக ஆரோக்கியத்தில் கட்டுப்பாடு தேவை.
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். சந்தோஷம் கூடும். வீட்டைச் சீரமைக்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.