சினிமா துறையில் தற்போது முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறை நடிக்கும் காலம் கட்டம் வந்து விட்டது. அந்தவரிசையில் தற்போது நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்திரி. இவர் 1950 மற்றும் 60-களில் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ் உட்பட பலருடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
ஆடம்பரமாக வாழ்ந்த அவர் சொந்தமாக படம் தயாரித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு இறந்தார். சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளது.
தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வின் இந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி படப்பிடிப்பு வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிற நிலையில், இந்த படத்தின் கதையில் சமந்தாவை நடிக்கும்படி அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சமந்தாவும் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகை நித்யாமேனனைத்தான் சாவித்திரியாக நடிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதில் சமந்தாவை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடக்கிற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.