சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதி முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டது. கடந்த 5-ம் தேதி காலமானாார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடிக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். இதனிடையே, ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடி உறவினர்களும் வந்திருந்தனர். சமாதி முன்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மலர் தூவி உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.