அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்ற யோசெமிட்டி தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இங்கு இருக்கும் குதிரைவால் நீர்வீழ்ச்சியில் (Horsetail Falls) வருடத்தில் சில நாட்கள் ஒரு அதிசயம் நிகழும். அதாவது சூரியன் மறைகின்ற வேளையில் இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் பாயும்போது, சூரிய ஒளியால் நெருப்பு போன்ற மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் ஒளிருகிறது.
இந்த இயற்கையான நிகழ்வு ’நெருப்பு வீழ்ச்சி’ என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
இந்த வருடம் நடந்த இந்த அதிசய நிகழ்வை கலிபோர்னியாவை சேர்ந்த Dave Gordon (37) என்னும் புகைப்பட கலைஞர் அட்டகாசமாக படம் பிடித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், வருடத்தில் சில நாட்கள் மட்டுமே இந்த அதிசயம் இங்கு நிகழும்.
நீர்வீழ்ச்சியில் நீரின் நிறம் நெருப்பு போல தங்க நிறத்தில் தெரிவது ஆச்சரிய நிகழ்வு தானே என அவர் கூறியுள்ளார்
இதை படம் பிடிப்பது எனக்கு எப்போதும் பெருமையும் மகிழ்ச்சியையும் தருகிறது. எனவும் Dave தெரிவித்துள்ளார்.