ஸ்பெயினில் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக முதன்முறையாக நிர்வாண உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் முதன்முறையாக Tenerife என்ற பகுதியில் இந்த வாரம் நிர்வாண உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் நிர்வாண முறையில் உணவு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த உணவகத்தின் சிறப்பு மெனுவாக aphrodisiac என்ற மெனு கார்ட் ஒன்று உள்ளதாகவும் அதன் சிறப்பம்சமே வேறு மாதிரி இருக்கும் என்று கூறப்படுகிறது. சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாணமுறையில் பணிப்பெண்கள் மற்றும் ஆண்கள் பரிமாறுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒருவர் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு 150 யூரோ ஆகும் என்று கூறப்படுகிறது. இதில் சிறப்பம்ச உணவுகளாக கடல் நண்டு மாம்பழம், ஆக்டோபஸ், உருளைக்கிழங்கு மற்றும் பிராந்தி போன்றவைகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், இது ஆரம்பிப்பதற்கு காரணமே பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் உள்ள The Bunyadi உணவகம் தான் என்று கூறியுள்ளார்.