வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு அசத்தலான புது அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் கொண்டு ஈசியாக ஸ்டேட்டஸ் பார்க்க முடியும்.
மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ நேரடியாக வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்டில் இருந்தே பார்க்கும் வசதியை வழங்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா 22.18.0.70 வெர்ஷனில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை சாட் லிஸ்ட்டில் இருந்தே நேரடியாக பார்க்க வழி செய்கிறது. இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி ஸ்டோரிஸ் போன்றே புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவைகளை 24 மணி நேரத்தில் மறையும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.
இந்த அப்டேட் சாட் லிஸ்ட் ஓரத்தில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டு இருப்பதை காண்பிக்கும். இந்த அம்சம் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தி வரும் சில பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற பீட்டா பயனர்களுக்கு விரைவில் வழங்கப்பட்டு அதன் பின் தான் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட உள்ளது.
இது தவிர சாட்டில் இருந்து அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீண்டும் பெற செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மிக முக்கிய உரையாடலின் போது தவறுதலாக குறுந்தகவலை அழித்து விட்டால் அதனை இந்த அம்சம் கொண்டு மீண்டும் பெற முடியும்.








































