இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரி ஒருவர் இந்தியா செல்ல உள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் இது விடயமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
தரச் சான்றிதழ்
இந்தியாவில் இருந்து 02 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது எனினும் இந்திய அதிகாரிகள் இன்னும் தரச் சான்றிதழை வழங்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக எடுத்த தீர்மானத்தை வடமேல் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழி வியாபாரிகளும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வரி மோசடி
தேவையான மூலப்பொருட்களின் விலைகளை குறைத்து உள்ளுர் உற்பத்தியாளர்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, முட்டை இறக்குமதியின் பின்னணியில் பாரியளவிலான வரி மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்








































