வீட்டில் பண செல்வத்தை அதிகரிக்க செல்வத்தின் அதிபதியான லட்சுமி- குபேர கடவுளை வணங்கினால் மிகவும் நல்லது.
மேலும், வீட்டில் வாஸ்து சாஸ்திர விதிகளை கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும், பண ஆதாயமும் உண்டாகும்.
வாஸ்து சாஸ்திரத்தில், லட்சுமி தேவி மற்றும் குபேர் ஆகியோரின் அருளை பெற வீட்டில் சில பொருட்களை கண்டிப்பாக வைக்க வேண்டும்.
அது என்ன என்பதை குறித்து விரிவாக காணலாம்.
விநாயகர்-லட்சுமி-குபேர் சிலை
வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்க, மகா லட்சுமி, குபேர் மற்றும் விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும்.
இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் பெருகத் தொடங்கி வீடெங்கும் சந்தோஷம் பரவும்.
தேங்காய் கலசம்
செல்வம் மற்றும் செழிப்பைப் பெற, வீட்டின் வடகிழக்கு மூலையில் மங்கள கலசத்தை வைக்கலாம். அந்த கலசத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு செப்பு காசை வைக்கவும்.
அதன் பிறகு அதில் தேங்காய் மற்றும் மா இலைகளை வைத்து அதன் முகத்தில் மஞ்சள் குங்குமத்தை இட வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் பரவும்.
மஞ்சள் துணி
மகா லட்சுமி- குபேரனின் அருளைப் பெற, வெள்ளைக் கோதுமையை மஞ்சளில் ஊறவைத்து உலர்த்தவும்.
இதன் பிறகு, இவற்றை சிவப்பு துணியில் கட்டி வீட்டின் முன் பக்கத்தில் வைக்கவும். மஞ்சள் லட்சுமி தேவியின் சின்னம்.
இப்படி இதனை வீட்டில் கட்டுவதால் பணம் கிடைக்கும் வழிகள் அதிகரிக்கும். சந்தோஷம் பெருகும்.
மகா லட்சுமி மற்றும் குபேரரின் ஆசீர்வாதத்தைப் பெற 3 நாணயங்களை பாதுகாப்பாக ஒரு சிவப்பு துணியில் கட்டி வீட்டின் பூஜையறையில் தொங்கவிடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.
மீன் உருவம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியம் நிலைத்து இருக்க ஒரு வெள்ளி மீன் சிலையை செய்து அல்லது வாங்கி வீட்டில் வைக்கலாம்.
இவ்வாறு செய்தால் வீட்டில் அமைதி மற்றும் செழிப்புக்கு வழி வகுக்கும்.