நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக நடந்து முடிந்த நடிகர் பிரேம்ஜியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி அமரன், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் என இரு மகன்கள் உள்ளனர்.
சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, கோவா, மாஸ் என்கிற மாசிலாமணி, மாநாடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி. தனித்துவமான நடிப்பு, நகைச்சுவை, அவருக்கே உரித்தான பாணியில் பேசும் வசனங்கள் என இவரின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
45 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவர் எங்கு சென்றாலும் எப்போது கல்யாணம் என்ற கேள்வி தான் ரசிகர்களிடத்தில் இருந்து எழும்.
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. நீண்ட காலத்திற்கு பின்னர் எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி என வெங்கட் பிரபுவும் அதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் திருத்தணியில் அவர் திருமணம் இன்று நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு மத்தியில் எளிமையாக நடந்து நடைபெற்றது.
தாலிகட்டிய மறு நொடி மணமகள் இந்துவை செல்லமாக கட்டியணைத்து பிரேம்ஜி முத்தம் கொடுத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
#Premji & #Indu Wedding photos ♥️ #Premgi #PremjiIndu #InduPremji pic.twitter.com/SEyMzIp8W9
— Happy Sharing By Dks (@Dksview) June 9, 2024