அடுக்கடுக்காக வந்த வேலை களைக் கூட அதி விரைவில் முடிக்கும் நாள். அந்நிய தேசத் திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
கிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். மறக்க முடியாத சம்பவமொன்று நடை பெறும். கூட்டுத் தொழிலில் பங்கு தாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
உதிரி வருமானங்கள் பெருகும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். திட்டமிட்ட பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்.
செல்வாக்கு மேலோங்கும் நாள். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பூமி வாங்கும் யோகம் உண்டு.
ஆதாயம் பார்க்காமல் அடுத்தவர்க்கு உதவும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று பஞ்சாயத் துக்கள் மூலம் தீர்வு பெறும். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும். சகோதரவழிச் சச்சரவு அகலும்.
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வந்து சேரும் நாள். செய் தொழிலில் உயர்வு கிட்டும். சொந்த, பந்தங்களின் வருகையால் சந்தோஷம் ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேண்டிய நாள். தடைகள் அதிகரிக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவது பற்றிச் சிந்திப்பீர்கள்.
மலைவலம் வந்து மால்மருகனை வழிபட வேண்டிய நாள். மாலையில் வரும் தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத் திற்கு வழிவகுத்துக் கொடுப்பர்.
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வெளிநாட்டிலிருந்து அழைப்புகள் வந்து சேரும். விலை யுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலைக்கொண்டு வரும்.
ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்கள் கைகொடுக்கும். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.
பிரச்சினைகள் தீர பிடிவாத குணத்தை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகம் செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.