Loading...
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சார்பாக ஆடிவரும் பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார்.
வீராங்கனை பி.வி.சிந்து உலக தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ளமயும் குறிப்பிடத்தக்கது.
Loading...
அந்த கால் இறுதி போட்டியில் நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, சிந்து அரை இறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் இன்டனான் ராட்சனோக்கை எதிர்கொள்கிறார்.
மேலும், நேற்று முன்தினம் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 10-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், சீனாவின் சென் யுபியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
Loading...