கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதியே தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து அப்பாவி மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கருணாதான் காரணம் என அண்மைக்காலங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் குறித்த செய்திகள் தொடர்பாக கருத்து கருத்து தெரிவிக்கும் போதே கருனா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகவே அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் கருனா மேலும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அன்றைய வீரர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்காவிட்டால் அதிகளவிலானவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தான் யாரையும் பலவந்தமாக குறித்த காலப்பகுதியில் போராட்டத்திற்கு இணைக்கவில்லை என தெரிவித்த கருனா காணமல் போனவர்கள் தொடர்பாக தனக்கு எந்தவிமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் காலத்தில் திட்டமிட்டு சில தீய சக்திகள் இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதாகவும் கருனா குற்றம் சுமத்தியுள்ளார்.