பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
குறித்த இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று சனிக்கிழமை சந்தித்து மைத்திரிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ.சேனாரத்ன மற்றும் மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகிய இருவருமே இவ்வாறு இணைந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலையொட்டி இனிவரும் நாட்களில் பல கட்சித்தாவல்களை எதிர்பார்க்கமுடியும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.