கடந்த சில மாதங்களாக யூடியூப் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு இடையில் காழ்ப்புணர்ச்சி நிலவி வந்துள்ளது.
இதன் காரணமாக இறுதியில் யூடியூப் அதிரடி நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளது.
அதாவது அமேசான் நிறுவனத்தின் Fire TV இல் யூடியூப் சேவையினை பெற முடியாதவாறு செய்துள்ளது.
இதன் காரணமாக Fire TV வாடிக்கையாளர்கள் யூடியூப் சேவையை பெற முடியாது சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இந்த தகவலை யூடியூப் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி 2018ம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து யூடியூப் சேவையை Fire TV இல் பெற முடியாது.
எனினும் Silk அல்லது Firefox உலாவியின் உதவியுடன் இச் சேவையைப் பெற முடியும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இரு நிறுவனங்களுக்கு இடையிலும் சுமுகமான உறவு மீண்டும் திரும்பின் Fire TV இல் யூடியூப் சேவை மீண்டும் கிடைக்கப்பெறும் என தெரிகின்றது.