2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் இடம்பெற்று வருகின்றது. இதில் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ – பிரேசில் அணிகள் மோதியது.
மெக்சிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நட்சத்திர வீரர் நெய்மர் அங்கம் விளையாடு பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்டது. காணப்பட்ட எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. எனினும் பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே பிரேசில் வைத்திருந்தது.
அதற்கமைய இரண்டாம் பாதியின் நெய்மர் கோல் அடித்தார். 51வது நிமிடத்தில் அசத்தலாக இந்த கோல் அடிக்கப்பட்டது.
பின்னர் 90 வது நிமிடத்தில் பிரேசில் அணி சார்பில் பிர்மிடோ இன்னும் ஒரு கோல் அடித்தார்.
அதற்கடைய ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.