ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் விசேட குணங்களையும் ஆளுமை மற்றும் எதிர்கால வாழ்க்கையையும் துள்ளியமாக கணிப்பதில் பெரிதும் பெயர் பெற்ற ஒன்றாக திகழ்கின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் கூடவே இருந்துக்கொண்டு தீங்கு செய்யும் குணத்தை கொண்டிருப்பார்கள்.அப்படி முதுகில் குத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாகவும் சாகசம் வெய்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் நெருங்கிய நபர்களை ஏமாற்றுவதற்க தயங்கவே மாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிய ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக யாரையும் ஏமாற்றும் அளவுக்கு தீவிரமாக செயற்படுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் இயல்பாகவே தங்களின் பேச்சில் வசீகர தன்மையை கொண்டிருப்பார்கள்.இவர்களின் சேச்சாற்றல் யாரையும் அவர்களின் பக்கம் இலுக்கும் வகையில் இருக்கும். இதனால் இவர்கள் பேச்சால் யாரை வேண்டுமானாலும் எளிமையாக ஏமாற்றிவிடுவார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் இவர்களை நம்புவது கடினம்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அமைதியான குணம் கொண்டவர்கள். இவர்கள் யாரிடமும் தேவையின்றி பேசமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆபத்து நேரங்களில் இவர்கள் தப்பித்துக்கொள்ள யாரை வேண்டுமானாலும் சிக்க வைத்து விடுவார்கள்.