ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் அவகோடா பழத்தில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி, ஈ, கே, பி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.
அவகோடாவின் நன்மைகள்
இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒலிக் அமில் அவகோடாவில் அதிகமாக உள்ளது. கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றது.
அதிக நார்ச்சத்து கொண்ட அவகோடா பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
செரிமான ஆரோக்கித்திற்கு உதவு நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களை வளர்க்கவும், ஆரோக்கியமான குடல் மைக்ரோபயோமையும் ஒட்டுமொத்த செரிமானத்தையும் ஆதரிக்கின்றது.
அவகோடாவில் உள்ள சியாக்சாந்தின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டி, விழித்திரையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினை குறைக்கின்றது. கண்புரை நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
சர்க்கரை அளவை சீராக வைப்பதற்கும் இன்சுலின் உணர்திறமை மேம்படுத்தவும் அவகோடா உதவுகின்றது.
பொலிவான சருமத்திற்கு உதவுவதுடன், முன்கூட்டியே வரும் வயதான அறிகுறிகள், சுருக்கங்கள் இவற்றினைத் தடுக்கின்றது.
தொடர்ந்து அவகோடாவை சாப்பிடுவதால் நினைவாற்றல், மூளை ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.








































