மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் கடும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதால், மகாவலி கங்கையின் நீர்மட்டம் கணிசமாக உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இதன் காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கலாவெவ வடிநிலத்திற்குச் சொந்தமான கலாவெவ மற்றும் கண்டலம நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான்பாயத் தொடங்கியுள்ளன.
போவததென்ன, இப்பாகட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது அதன் உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த அபாய நிலை
மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் தற்போது அதன் கொள்ளளவை எட்டியுள்ளதால், அதுவும் எந்த நேரத்திலும் வான்பாயக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த அபாயம் நிலவுவதால் ஆற்றுப் பகுதிகளைப் பயன்படுத்துவோர் மற்றும் தாழ்நில மக்கள் அவசர நிலைமைகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








































