இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சர்கார் உட்பட 62 படங்களில் நடித்திருக்கும் அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் 1984ஆம் ஆண்டு‘வெற்றி’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் ‘நாளைய தீர்ப்பு’ மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 61 படங்களில் இவர் நடித்தார்.
சினிமால் வெற்றி தோல்வி படிகளை கடந்த விஜய், தற்போது போக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படுகின்றார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய அவரது சொத்து 126 கோடி என்பது தெரியவந்துள்ளது. இந்திய ரூபாய் பெறுமதியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்திற்கு தற்போது அவர் 26 கோடி சம்பளம் பெறுகின்றார். இதற்கு மேலதிகமாக பல சொகுசு கார்களுக்கும் அவர் சொந்தக்காரராகும். இன்னும் 3 வருடங்களில் மேலும் 60 வீதம் சொத்து மதிப்பு அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.