இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்துள்ள அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இந்திய அணிக்காக களமிறங்குவார் என கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.
இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 7-ஆம் திகதி நடக்கிறது.
ஆறுதல் வெற்றிக்காக இந்தியா களமிறங்கும் இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மீண்டும் காயமடைந்துள்ளார்.
இதனால் ஐந்தாவது போட்டியில் இவர் ஆடுவது சந்தேகம் தான். ஏற்கனவே அஸ்வினுக்கு இந்த தொடரில் பல முறை காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவுக்கு ஐந்தாவது போட்டியில் விளையாட வாய்ப்பு தரப்படும் என தெரிகிறது.