எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
இதில் இரு முக்கிய வாட்பாளர்களாக கருதப்படுகின்ற சஜித் பிறேமதாச ( புதிய ஜனநாயக முன்னணி, சின்னம் – அன்னம் ) ,கோட்டாபய ராஜபக்ஸ ( ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன , சின்னம் – மொட்டு ) ஆகிய இருவருக்குமிடையில் நீயா? நானா? என்ற போட்டி அதிகமாகவுள்ளது.
இவர்களில் யாரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான இயல்புகள் ரீதியான ஒப்பீட்டினை அரசியல் விமர்சகர்கள் ஒப்பீட்டினை வெளியிட்டுள்ளனர்.
|
|
---|---|
ஜனநாயக ரீதியான தலைவன் | இராணுவ மயப்பட்ட சர்வதிகாரி |
ஜனநாயப் பாராளுமன்ற அரசியலுக்கும் பழக்கப்பட்டவர். | இராணுவ ரீதியான கெடுபிடி அரசியலுக்குப் பழக்கப்பட்டவர். |
ஜனநாயகப் பண்பான அரசியல் பண்பாட்டினை விரும்புகின்றவர். | வன்முறையான அடக்கு முறை அரசியலை நம்புகின்றவர் |
மக்கள் நலன்களை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றவர். | இராணுவத்தினையும் , உளவுத்துறையையும் பலப்படுத்த விரும்புகின்றார். |
குற்றவாளிகளைத் தண்டிக்க விரும்புகின்றார். | சிறையிலுள்ள இராணுவக் குற்றவாளிகளை விடுதலை செய்ய விரும்புகின்றார். |
சகல இன, மத மக்களையும் மதிக்கத்தக்கவர். | சிங்கள பௌத்த பேரின அடிப்படைவாதி |
யுத்தத்தில் தந்தையை இழந்தாலும் மக்களோடு மக்களாக வாழ்கின்றார். | யுத்த பயத்தால் நாட்டை விட்டு ஓடித் தப்பியவர். |
தொடர்ந்தும் இலங்கைப் பிரசையாக இருக்கின்றார். | அமெரிக்கப் பிரசையாக இருந்தார். பதவிக்காக இலங்கைப் பிரசையாக மாறியவர். |
குடும்பத்தவர்கள் இலங்கைப் பிரசைகள். | மனைவி, பிள்ளைகள் இப்பொழுதும் அமெரிக்கப் பிரசைகள் |
சட்டவாட்சியை மதிப்பவர். | காட்டாட்சி, காட்டுச்சட்டத்தில் நாட்டம் காட்டியவர். |
பெரும்பான்மை இனத்தவர் , சிறுபான்மை இனத்தவர் வாக்குகளையும் வரவேற்பவர். | பேரினவாத வாக்குகளால் மட்டும் வெற்றி பெற நினைப்பவர். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையற்றவை என நினைப்பவர் |
யுத்தக் குற்றங்கள் புரியாதவர் | பாரிய யுத்தக் குற்றங்கள் புரிந்தவர். |
மக்களை கடத்தியமை , காணாமல் ஆக்கியமையோடு தொடர்பற்றவர். | மக்களை கடத்தியமை, காணாமல் ஆக்கியமை என்பவற்றோடு நெருக்கமாக கூறப்படுபவர். |
புத்தி ஜீவிகள் ,பத்திரிகையாளகளை மதிப்பவர். | புத்தி ஜீவிகள் ,பத்திரிகையாளகளை சித்திரவதை , கொலைகளோடு தொடர்புபட்டவராகக் கூறப்படுபவர். |
சகல மக்களுக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பவர். | சிறுபான்மைத் தமிழர்கள், முஸ்லிம்ங்கள் ,இரண்டாவது தரவரிசையினர் என்ற எண்ணம் கொண்டவர். |
இனப்படுகொலை,இனச்சுத்திகரிப்புடன் தொடர்பற்றவர். | இனப்படுகொலை,இனச்சுத்திகரிப்புக்கு கட்டளை வழங்கியவர். |
மனித உரிமைக்காப்பாளர். | மனித குலத்திற்கு எதிரானவர். |
கொலைகள், காணாமல் ஆக்கப்படுவதுடன் சம்பந்தமற்றவர். | யுத்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும், காணாமல் ஆக்கப்படுவதற்கும் சூத்திரதாரியாக இருந்தவர். |
இலங்கை சகல மக்களுக்குமான நாடு என நினைப்பவர். | இலங்கை சிங்கள பௌத்த நாடு என நினைப்பவர். |
ஊழல் , மோசடி, கையூட்டுகளோடு தொடர்பற்றவர். | ஊழல் , மோசடிகள், என்பவற்றுடன் சம்மந்தப்பட்டவர். |
குடும்பக் கும்பலாட்சியை விரும்பாதவர். | குடும்பாட்சி ,கும்பலாட்சியை நடாத்தியவர்கள் |
அரசியல், பொருளாதார ,சமூக சூழல் சர்வதேச அறிவுள்ளவர். | அரசியல், பொருளாதார , அறிவு குறைந்தவர். |
விதவைகள், அநாதைகள், அங்கவீனர்களை உருவாக்காதவர். | விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள் என்று பல்லாயிரக்கணக்கானவர் உருவாக்க காரணமானவர். |
வயோதிபர்கள், பெண்கள் ,சிறுவர்கள், குழந்தைகள் கர்ப்பிணிகள் போன்றவர்களை மதிப்பவர். | யுத்தத்தின் போது வயோதிபர்கள், பெண்கள் ,சிறுவர்கள், குழந்தைக் கர்ப்பிணிகள் கொலையாவதற்குக் காரணமாக இருந்தார். |
நாட்டைக் காட்டிக் கொடுக்காத நாட்டுப்பற்றாளர். | லசந்த விக்கிரமதுங்க என்ற பத்திரிகையாளரின் கொலை தொடர்பான அமெரிக்க நீதிமன்ற வழக்கின் போது கொலைக்குக் காரணம் இராணுவம் ,அரசாங்கம் என்று கூறித் தப்பிக்கொண்டார். ஆகவே இவர் போலியான நாட்டுப்பற்றாளர். |
வன்முறையாளர்கள் , கடத்தல்காரர்கள், கப்பக்காரர்கள் கொலையாளிகளுடன் தொடர்பற்றவர். | கருணா, பிள்ளையான், இனிய பாரதி , தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினர் ( சர்கான் குழு ) போன்ற கொலையாளிகள் , கடத்தற் காரர்களுடன் நேரடியாக ,மறைமுகமாக தொடர்புள்ளவர். |
சட்ட விரோதிகளைத் தன்னுடனோ தனது கட்சியிடனோ இணைக்காதவர். | கருணா, பிள்ளையான், டக்ளஸ் போன்ற வன்முறையாளர்களின் கட்சிகளோடும் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்களின் இனவாதக் கட்சிகளுடனும் தொடர்புபட்டவர். |
உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய ஆளுமையுள்ளவர். | உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு முகங்கொடுக்கத்தக்க ஆளுமை இல்லாதவர். |
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தினை எதிர்ப்பவர், பெண்களைப் பாதுகாக்கத்தக்கவர். | பல தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படவும், சித்திரவாதக்குள்ளாகவும், கொல்வப்படுவதற்குமான சூத்திர தாரியாக இருந்தார். |
யுத்தக் குற்றமற்றவர் | யுத்த இறுதியில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களைக் காணாமல் ஆக்கினார் , கொல்ல வழிகாட்டியவர். |
ஜனநாயகம், சட்டவாட்சி, நீதித்துறை, அரசியல்யாப்பு , மனிதவுரிமை, ஊடக சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாக்கக் கூடியவர். | காட்டாட்சி, காட்டுச்சட்டம், காட்டுத்தர்பார், பயங்கரமான சூழல், அடக்குமுறை , ஒடுக்குமுறை என்பவற்றில் நாட்டமுள்ளவர். |
நாட்டுக்குத் தலைமை தாங்கும் ஆளுமை உள்ளவர். | தண்டிக்கப்பட வேண்டியவர், சிறையில் இருக்க வேண்டியவர். |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி விசாரனையை ஏற்படுத்தக் கூடியவர். | காணாமல் ஆக்கியவர்களுக்கு மரணப்பதிவு வழங்க உள்ளார். |
சொர்க்கலோகம் இல்லாது விட்டாலும் சுதந்திர சூழலைப் பேணக்கூடியவர். | தாங்கள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு, மக்களை நரகலோகத்திற்கு அனுப்பக் கூடியவர். |
நீதித்துறையைப் பாதுகாக்கக் கூடியவர். | நீதித்துறையை தலையாட்டும் துறையாக மாற்றக் கூடியவர். |
நடுநிலையான அரச நிருவாகம், பொலிஸ் நிருவாகத்தினை விரும்புகின்றவர். | அரச நிருவாகம் , பொலிஸ், இராணுவத்தினை தனது அரசியல் கட்சி மயப்படுத்தக்கூடியவர். |
சட்ட விரோதமாகக் கறுப்புப்பனத்தினை விரும்பாதவர். | சட்டவிரோதமாக கறுப்புப் பணம் உழைப்பதில் நாட்டமுடையவர். |
நாட்டில் பொருளாதார சுபீட்சத்தினை ஏற்படுத்திக் கடன் சுமையினை குறைத்து, வறுமையை நீக்கக் கூடியவர் | நாட்டைக் கடன் சுமைக்கு உள்ளாக்கி,நவகாலனித்துவ நாடாக்கக்கூடியவர். உதாரணம்: சீனாவிற்குரிய காலனித்துவ நாடாக மாற்றியவர். |
ஜனநாயகத் தலைவர் சமூக, பொருளாதார, அரசியல், புவியியில், சர்வதேசவியல் ஆளுமை மிக்கவர். | சர்வாதிகாரத் தலைமை சமூக, பொருளாதார, அரசியல், புவியியில், சர்வதேசவியல் ஆளுமை அற்றவர். |
ஏழைகள், விதவைகள், அநாதைகள், அங்கவீனர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் மீது அன்பு காட்டுகின்றவர். | குடும்பத்தவர்கள், உறவினர்கள், பேரின வெறியர்கள், அடக்குமுறைக்கு உதவுகின்றவர்கள் மீது அக்கறை காட்டுபவர். |
ஜனநாயக அரசியல் பண்பாட்டுக்குரிய பயிற்சி பெற்ற தலைவர் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாராளுமன்ற ஜனநாயகத்திற்குப் பழக்கப்பட்டவர். | இராணுவ அடக்குமுறை, இனத்துவேசம், பாரபட்சம், பக்கச்சார்பு, பாரிய குற்றங்கள் , என்பவற்றுடன் தொடர்புபட்டவர். 20 வருடங்கள் இராணுவத்தில் இருந்தவர். |
வடக்கு, கிழக்கு , மலையக போன்றவற்றையும் அபிவிருத்தி செய்யக்கூடியவர். | வடக்கு, கிழக்கு , மலையக போன்றவற்றைப் புறக்கணிக்கக்கூடியவர். |
நாட்டுக்குப் பொருத்தமான ஜனநாயகத் தலைவர் | பொருத்தமற்ற, பக்குவம் – பண்பற்ற சர்வாதிகாரத் தலைவர். |
பெண்களின் உரிமையில் அக்கறை காட்டுபவர் | யுத்தத்தில் தமிழ்ப்பெண்களைப் பாலியல் பலாத்காரம், சித்திரவதை, கொலை செய்யப்படுவதற்குத் தலைமை தாங்கியவர். |
ஒழுக்க விழுமியம், மனச்சாட்சி வழியில் பயணிப்பவர். | ஒழுக்க விழுமியம், மனச்சாட்சி அற்றவர். |
சகல மக்களாலும் நம்பக்கூடியவர். | பேரினவாதிகள் , ஒட்டுக்குழுக்களால் நம்பப்படுபவர். |
இரு வேட்பாளர்களுக்குமான பண்புகளை வாசித்து அறிந்து விட்டீர்களா?உங்கள் வாக்கு யாருக்கு?
ஜனநாயகத் தலைவரான சஜித்தாகவே இருக்கட்டும்
( நல்லவர், வல்லவர், ஜனநாயகவாதிகள் சமத்துவவாதிகள், பண்பாளர்கள், அன்பானவர்கள், உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் போன்றவர்களின் தெரிவு சஜித்தாகவே இருக்கட்டும் ) சர்வாதிகாரியான கோட்டாவாக இருக்கவே கூடாது.
(ஊழல்வாதி, மோசடிக்காரர்கள் , கொலையாளிகள் , கொள்ளையர்கள் , கடத்தல்காரர் , கப்பக்காரர் , ஃஇனவெறியர்கள் , மதவெறியர்கள் , காக்கைவன்னியர்கள் (காட்டிக்கொடுத்தவர்கள்) , கெடுபிடிகள் – எடுபிடிகள் , கையூட்டுக்காரர்கள் , கறுப்புப்பண வாதிகள் ஆகியோரின் தெரிவுதான் கோட்டாபய ) என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.