திருமண தம்பதிகளை மியூசிகல் சேர் விளையாட வைத்து எடுத்த காணொளி ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது.
பொதுவாக திருமணங்களில் விளையாடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்தத் திருமணத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று மியூசிகல் சேர் விளையாட்டை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதாவது வரிசையான நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் ஆண்கள் ஒவ்வொரு நாற்காலியாக ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து பெண்ணை அமர வைக்க வேண்டும்.
Latest gaming u can have after any function
Publiée par Hitesh Vadhar sur Lundi 11 novembre 2019
அப்படி எவ்வளவு தூரம் நாற்காலியை உயர்த்தி அமர வைக்கின்றனர் என்பதுதான் போட்டி. அதில் ஒருவர் குறிப்பிட்ட தூரம் வரை பெண்ணை அமர வைக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் பொத்தென கீழே போட்டு விடுகிறார்.
இது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இறுதியில் மணப்பெண் கீழ விழுந்து அடிப்பட்டு விடுகின்றது. இந்த விபரீத விளையாட்டை பாரத்த இணையவாசிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.