இந்திய பிரதமர் நரேந்திர மோடி யானை சாணத்தை நுகர்ந்து பார்க்கும் வீடியோவை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2019 -ம் ஆண்டு Man Vs Wild எனும் சாகச பயணத்தை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.
அப்போது மோடியுடன் இருந்த வேடிக்கையான கிளிப்பை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ள வீடியோவில், “யானை ஒன்று கடந்து போயுள்ளது என்று பியர் கிரில்ஸ் மோடியிடம் கேட்கிறார். அதற்கு அவரும் ஆமாம் என்று கூறுகிறார். பின்னர், கீழே இருந்த காய்ந்த யானை சாணத்தை கையில் எடுத்த பியர் கிரில்ஸ், அதனை நுகர்ந்து பார்க்கும் படி மோடியிடம் கூறுகிறார்.
அதற்கு அவரும் நுகர்ந்து பார்த்து, தற்போது இது உரமாகிவிட்டது என்று அவரிடம் கூறுகிறார். அதற்கு பியர் கிரில்ஸ், ஆமாம் கொசுக்களை விரட்ட இது உதவுகிறது என்று பதில் அளிக்கிறார்.
மேலும் அவர், யானை சாணம் போட்டவுடனையே ஈரமாக இருக்கும், அப்படி தான் ஆப்ரிக்காவில் இருந்தபோது யானை சாணத்தை பிழிந்து அதில் இருந்து வந்த சாறை குடித்தேன் என்றார்.
இதை கேட்டதும் பிரதமர் மோடி வாய் விட்டு சிரித்தார். மேலும், அந்த வீடியோவில் 2017 -ம் ஆண்டு பியர் கிரில்ஸ் யானை சாணத்தை பிழிந்து சாற்றை குடிக்கும் காட்சிகளும்” இடம்பெற்றுள்ளது.
A fun clip from my time in the Indian Wilderness with Prime Minister Modi for Man vs Wild. Toilet humour brings everyone together! 🤪😂😬#adventure #manvswild #India #NeverGiveUp pic.twitter.com/eK340Qn4D1
— Bear Grylls OBE (@BearGrylls) January 8, 2024