தற்போது டிரெண்டிங்கில் உள்ள ‘முத்தமழை’ பாடலை Middle Class வாழ்கையுடன் சம்மந்தப்படுத்தி இன்டாகிராம் பிரபலம் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள சின்மயி வெர்ஷன் ‘முத்தமழை’ பாடல், பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படத்தின் பாடல்களை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். அதே பாடலை தமிழில் பாடகி தீ பாடியுள்ளார்.
இருப்பினும் Dhee பாடிய ஒரிஜினல் வெர்ஷனை விடவும் சின்மயி தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடிய முத்தமழை பாடலுக்கு ரசிர்களின் பலத்த வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்டாகிராம் பிரபலம் ஒருவர் இந்த முத்தமழை பாடல் வரிகளை Middle Class வாழ்கைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து தன்னுடைய சொந்த குரலில் பாடி வெளியிடுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
View this post on Instagram