திருமணத்தை முடித்து வைத்த கையோடு மேடையில் இருந்த ஐயர் பார்த்த வேலை சமூக வலைத்தளங்களில் காணொளியாக வெளியாகியுள்ளது.
ஐயர் பார்த்த வேலை
பொதுவாக இந்து மதப்படி நடக்கும் திருமணத்தில் ஐயர்கள் தான் மேடையில் அமர்ந்து சடங்குகளை செய்வார்கள். இப்படி சடங்குகள் சரியாக செய்து திருமணம் செய்தால் திருமணம் முழுமைப் பெறும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில், தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்த பூசாரி ஒருவர், திருமணம் முடிந்த கையோடு மேடையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை அவருடைய பையில் அள்ளிப் போடுகிறார்.
சில வீடுகளில் ஐயருக்கு தேவையான பொருட்கள் ஒரு தட்டில் வைத்து கொடுக்கப்படும். அதனை அவர்கள் வாங்கிச் செல்வார்கள், ஆனால் மேடையில் இருந்து எடுக்கமாட்டார்கள்.
இன்னும் சிலர், தட்டில் வைத்து கொடுக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு, மேடையில் வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பைக்குள் போட்டுச் செல்வார்கள். மத குரு என்பதால் வீட்டிலுள்ளவர்களும் எதுவும் கூறாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படியொரு சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது எடுக்கப்பட்ட காணொளி தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாரபட்சம் பாராமல் குறித்த ஐயர் பொருட்களை அள்ளிப் போடுகிறார்.
இதனை பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது. குறித்த காணொளியை இணையவாசிகள், எதுவும் கொடுக்காமல் மற்ற வீடுகளில் வந்து சாப்பிட்டுச் செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
அள்ளிப் போடு, அள்ளிப் போடு 😂😂😂 pic.twitter.com/k0HKkxkkhr
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) June 10, 2025