93 வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு தாலி வாங்க சென்ற போது கடையின் உரிமையாளர் செய்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தாலி வாங்கிக் கொடுத்த முதியவர்
வரவிருக்கும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கால்நடையாக யாத்திரை செல்வது வழக்கம்.
அப்படி வெள்ளை வேட்டி- குர்தா அணிந்து கொண்டு மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த 93 வயதான கிராமவாசி ஒருவர் தன்னுடைய மனைவியுடன் நகை கடைக்குள் நுழைகிறார்.
அப்போது மனைவி தாலி வாங்கி தருமாறு கேட்கிறார். ஆனால் இவர்கள் இப்படி பேசிக் கொண்டு கடைக்குள் வரும் பொழுது கடையில் உள்ளவர்கள் நன்கொடை கேட்பதற்காக வந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.
எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், முதியவர்கள் இருவரும் தாங்கள் கடைக்குள் வந்தற்கான காரணத்தை கூறுகிறார்கள் அப்போது அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து முதியவர்களை வரவேற்கிறார்கள்.
தாலி வாங்குவதற்காக அவரிடம் 1,120 ரூபாய் மாத்திரமே இருந்தது. ஆனால் பெரியவரின் நல்ல மனதை கவனித்த உரிமையாளர் வெறும் 20 ரூபாயை மாத்திரம் பெற்றுக் கொண்டு தாலியை கொடுத்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் மில்லிக்கணக்கானோர் குறித்த உரிமையாளருக்கு வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வரகிறார்கள்.
This just made my day.
An elderly couple on the way to Pandharpur, a pilgrimage site in Maharasthra, visits a jewellery store to buy some jewels with their meagre savings.
How the shop owner helped them was simply heart-touching. Good Karma will always take you higher in life… pic.twitter.com/WkINsZE9JD— Sqn Ldr Varlin Panwar (Retd) (@VarlinPanwar) June 16, 2025