Loading...
வடக்கின் பாரிய நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி இரணைமடுக்குளம் அமைக்கப்பட்டு நீர் தேக்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களினால் 100 பானைகளில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
இன்று (17) வெள்ளிக்கிழமை காலை இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
Loading...
இந்த நிகழ்வில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Loading...