உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 277,523,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,393,374 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 248,606,198 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 434 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,47,59,659 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,08,926 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,78,759 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1,39,69,76,774 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை 269 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.