Loading...
இரத்தினபுரி (Ratnapura) – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் இந்திய (India) பிரஜை ஒருவர் விழுந்து காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (29.03.2024) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மும்பையில் வசிக்கும் 25 வயதுடைய பாரத் சந்திரதாஸ் என்ற இளைஞரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் ஊடாக சிவனொளிபாதமலையை நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவர் தவறி விழுந்துள்ளார்.
அதனையடுத்து, குறித்த நபரை மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Loading...








































