Loading...
உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் ஒன்று நடத்தப்படும் என்றும் அதற்கு தமது கட்சி தயாராகி வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Loading...