கூகுள் பே ஆப் மூலம் இப்போது ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடந்த வருடம் கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சாசெட் கடன்களை வழங்குவதாகவும், இதனை Gpay பயன்பாட்டில் பெறலாம் என்று அறிவித்திருந்தது.
இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் கட்டணச் சேவை வழங்குனர்களில் ஒன்றான GPay, வங்கிகள் மற்றும் வங்கி காரா நிதி நிறுவனங்களுடன் கைகோர்த்து, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்காக கடன் சார்ந்த தயாரிப்புகளின் வரம்பை வெளியிடுவதாக கூறியுள்ளது.
இந்த கடன் சேவைகளை வழங்குவதற்கு தொழில்நுட்ப நிறுவனமான DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாம்.
ரூபாய் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சிறிய டிக்கெட் கடன்கள் சட்செட் கடன்களாக கொடுக்க முடிவு எடுத்துள்ளது. இந்த தொகையை 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் என திருப்பி செலுத்தும் காலத்தையும் நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு பெறப்படும் கடன்களை EMI மூலம் ரூ.111 முதல் ரூ.15 ஆயிரம் வரை செலுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வணிகர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் கடன் உதவி செய்ய ஆரம்பித்துள்ளது.
கூகுள் பேவில் உள்ள க்ரெடிட் லைன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கலாம்.
இப்போது ஸ்டேட் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியவற்றுக்கும் மட்டும் உள்ளது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.