விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள். இளைய தளபதி விஜய் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி ரசிகர்களும், திரையுல பிரபலங்களும் தளபதிக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் #HBDThalapathy, #HBDMERSALVIJAY ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.
அந்தவகையில் விஜய் அரசியலுக்கு வர தகுதியும் சூழ்நிலையும் இருக்கிறது. ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கிறார்கள். எனவே வருங்கால முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் அவ்வப்போது அடிபடுகிறது, அதுமட்டுமின்றி அவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார். இந்நிலையில், நடிகர் சேகரின் இந்த வாழத்து, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை சூசகமாக காட்டுகிறது என்கின்றனர்.