Loading...
தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. மூன்று அணிகளாக இருந்த அதிமுக தற்போது இரண்டு அணிகளாக மாறியுள்ளது. தினகரன் தலைமையிலான அணி ஆட்சியை கலைப்பதில் மும்மரமாக உள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி வருகிறார் ஸ்டாலின். எந்நேரத்திலும் தமிழகத்தில் ஆட்சி கலையலாம் என்னும் பரபரப்பான நிலையில் தற்போது நடிகர் விஷால் தினகரனை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
Loading...
இந்த சந்திப்பு அரசியல் பக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் இது அரசியலுக்கான ஆரம்பமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
ஆனால் விஷால் தரப்பில் தனது சகோதரியின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக தினகரனை சந்தித்ததாக கூறப்படுகிறது.
Loading...