ஜேர்மனியில் காதலியை நீரில் அமுக்கி கொல்ல பார்த்த காதலன் நீரில் மூழ்கிய நிலையில் மருத்துவ குழுவினர் காதலனை காப்பாற்றியுள்ளனர்.
ஜேர்மனியின் பெர்லின் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள ஹாவல் நதிக்கு 19 வயதான இளைஞர், 17 பெண்ணுடன் வந்துள்ளனர்.
அப்போது, திடீரென பெண்ணை இளைஞர் நதியில் தள்ளிவிட்டுள்ளார், பின்னர் தானும் குதித்த நிலையில் காதலியின் தலையை நீரில் அமுக்கி கொல்ல பார்த்துள்ளார்.
ஆனால் இளைஞருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்க தொடங்க, நீச்சல் தெரிந்த பெண் தப்பித்து கரையேறியுள்ளார்.
சம்பவத்தை பார்த்த அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தர விரைந்து வந்த மருத்துவ குழுவினர் இளைஞரை காப்பாற்றி முதலுதவி செய்தார்கள்.
கரையேறிய பெண்ணுக்கும் உடல் வெப்பக்குறைவு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
பொலிசார் கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் முன்னர் ஒன்றாக காதலித்த நிலையில் பின்னர் பிரிந்துள்ளனர்.
இந்த ஆத்திரத்தில் தான் இளைஞர் பெண்ணை கொல்ல முயன்றுள்ளார், இதுகுறித்து அவரிடம் விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.