இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ஓட்டங்களும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களும் பெற்றன.
13 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
இந்திய அணியின் 194 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கமைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோஹ்லியை இங்கிலாந்து ஊடகங்கள் பாராட்டியுள்ளது.
“பதிலடி கொடுக்க முடியும் என்பதை கோஹ்லி நிரூபித்து காட்டியுள்ளார். தனி நபராக ஹோலிவாக பதிலடி கொடுத்தார்….” என இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளது.