புரதச்சத்து மனிதர்களின் உடல் திறனை அதிகரிக்க வெகுவாக உதவுகிறது.
அது மட்டுமின்றி, ஹார்மோன், தசை, எலும்பு, தோல், இரத்தம், குருத்தெலும்பு என உடல் வலிமையை அதிகரிக்க உதவும் அனைத்திற்கும் புரதச்சத்தின் பங்கு முக்கிய தேவையாக விளங்குகிறது.
பால் உணவுகளான, சீஸ், தயிர், பால் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் புரதச்சத்து கிடைக்கிறது.
அதுபோன்று, அசைவ உணவுகளான இறைச்சி மற்றும் மீன் வகைகளிலும் புரதச்சத்து கிடைக்கிறது.
ஆனால், புரதச்சத்து கிடைக்க வேண்டுமென்பதற்காக இறைச்சி உண்ணும் பெண்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் 2016 மாநாட்டில் வெளியான ஆய்வு கட்டுரையில், புரதச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ளும் முதிர் வயது பெண்களையும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவை உட்கொள்ளும் முதிர்வயது பெண்களையும் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் இறைச்சி உணவை உட்கொண்ட பெண்கள் பலர் இதயக் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்து ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.