பொதுவாகவே வீட்டில் ஒரு முரங்கை மரம் இருந்தால் போதும் இந்த வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்துக்கு இது பெரிதும் துணைப்புரியும்.
முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனை பொக்கிஷம் என்றே கூற வேண்டும்.
முருங்கை இலைகளின் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடி செய்து அதனை விற்பனை செய்து வருகின்றது. முருங்கை இலைகளில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன.
அதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இது தீர்வு கொடுக்கின்றது. காலையில் முருங்கை இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முருங்கை இலையில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.தினசரி காலையில் இந்த இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
முருங்கை இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இது பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது.
முருங்கை இலைகளை தினசரி காலையில் சாப்பிட்டு வருவதால் இவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதயத் துடிப்பை சீராக்க உதவுவதுடன் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் வலுவாக குறைக்கின்றது மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
முருங்கை இலைகளில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுவதால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என முயற்ச்சி செய்பவர்களுக்கு முருங்கை இலைகள் சிறந்த தெரிவாக இருக்கும். அதுமட்டுமன்றி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
மேலும் முருங்கை இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மன ஆரோக்கியம் மேம்படும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன அழுத்தத்திற்கு சிறந்த தீர்வாக அமையும்.