பொதுவாக ஆண்டுதோறும் சுமார் மில்லியன் கணக்கானோர் இதய நோயால் (Cardiovascular Diseases) உயிரிழக்கிறார்கள்.
இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் இரத்த குழாய்கள் தொடர்பான கோளாறுகளால் ஏற்படுகின்றன.
இதில் கரோனரி இதய நோய், செரிப்ரோவாஸ்குலர் நோய், ருமாட்டிக் இதய நோய் மற்றும் பிற நிலைமைகள் உள்ளடங்கும்.
அந்த வகையில் இதய நோய் வருவதற்கான அறிகுறிகள் தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இதய நோயின் அறிகுறிகள்
1. நெஞ்சு வலி அல்லது நெஞ்சு பகுதிகளில் மிகுந்த அசௌகரியம் ஏற்படல்.
2. தோள்பட்டை, கைகள், முதுகு, கழுத்து, தாடை அல்லது மேல் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படல்.
3. மூச்சுச் திணறல், குளிர்ச்சியான சூழ்நிலையிலும் வியர்ப்பது, குமட்டல். தலைவலி, தலைச்சுற்றல் இப்படியான பிரச்சினைகள் ஏற்படலாம்.
4. மாரடைப்பு வரும் முன்னர் ஈறுகளில் காயங்கள் தோன்றி நீண்ட நாட்கள் குணமாகாமல் இருக்கலாம்.
5. தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள் தோன்றல்.
6. பெண்களுக்கு அஜீரணம் கோளாறுகள் போல் நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படலாம்.








































