கொலம்பியா பிளேன் விழுந்தது எப்படி இந்த மர்மத்தை கேட்டால் நீங்கள் ஆடிப்போவீர்கள் : ஒரு வீடியோ கேம் தான் காரணம் ……
பொலிவியா நாட்டில் இருந்து கொலம்பியா நோக்கி பறந்த விமானம், கொலம்பிய மலைப் பகுதியில் விழுந்து நொருங்கியதும். அதில் பயணித்த பல முன்னணி பிரேசில் உதைபந்தாட்ட வீரர்கள் மரணித்ததும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது எவ்வாறு நடந்தது என்று தெரிந்தால் உங்கள் தலையே சுற்றும்.. பொலிவியாவில் இருந்து குறித்த விமானம் பல முன்னணி வீரர்களையும் பயணிகளையும் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான வேளை, ஒரு விளையாட்டு வீரரின் வீடியோ கேம்ஸை காணவில்லை என்று அவர் முறைப்பாடு செய்ய. பிளேனில் இருந்த அனைத்து பணியாட்களும் அதனை 20 நிமிடமாக தேடியுள்ளார்கள். இறுதியில் கண்டு பிடித்துகொடுத்துள்ள நிலையில்.
விமானம் 20 நிமிட தாமதமாகவே புறப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் பொலிவீயா நாட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் குறித்த விமானம் தரை இறங்கி எரிபொருளை நிரப்பிவிட்டு தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமானம் ஏற்கனவே 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டதால், அவர்கள் அந்த சிறிய விமான நிலையத்திற்கு வரும் வேளை நள்ளிரவு ஆகிவிட்டதால் அவர்கள் விமான நிலையத்தை பூட்டிவிட்டார்கள். ஆனால் அந்த இடத்தில் இருந்து பிரேசில் செல்ல போதுமான எரிபொருள் விமானத்தில் இருக்கவில்லை.
இருப்பினும் எப்படி என்றாலும் சென்றுவிடலாம் என்று கருதிய விமானிகள், எரிபொருளை நிரப்பாது அப்படியே பறப்பில் ஈடுபட்டுள்ளார்கள். கொலம்பியா நாட்டுக்கு அருகாமையில் பறப்பில் ஈடுபட்டவேளை, திடீரென எரிபொருள் தீர்ந்துபோன நிலையில் , விமானத்தை உடனடியாக தரை இறக்க முயற்ச்சி செய்துள்ளார்கள் விமானிகள். ஆனால் அது மலைப் பாங்கான பகுதி என்பதனால் விமானம் சீராக தரையிறங்கவில்லை. இதனால் 71 பயணிகள் மாண்டு போனது மட்டுமல்ல. அனைத்து திறமை மிக்க உதைபந்தாட்ட வீரர்களும் இறந்துவிட்டார்கள். இதனால் பிரேசில் நாட்டின் உதைபந்தாட்ட கழகமே காலியாகிவிட்டது … எவரும் இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.