ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9ஆகக் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆண்கள் 15 வயதிலும் , பெண்கள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை ஈராக்கில் பெண்களின் திருமணத்துக்கான சட்டபூர்வ வயது 18 ஆக உள்ளது.
ஆனால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலத்தின்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சட்டபூர்வ வயது 18ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே இந்த சட்ட மூலத்துக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.