ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையைச் செலவிட நேரிடலாம். அன்னிய தேச அனுகூலம் உண்டு.
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அந்தஸ்து உயரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பணவரவு திருப்தி தரும்.
நட்புவட்டம் விரிவடையும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். இல்லம் தேடி வரும் விருந்தினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள்.
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்புக் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினைகள் திடீரென நல்ல முடிவிற்கு வரும்.
மன அமைதி கிடைக்க மால்மருகனை வழிபட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பிரயாசை எடுக்க நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகலாம்
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த உறவினர் ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண ஆலங்காரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
உத்தியோக வாய்ப்புகள் உறுதியாகும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கிடைக்கும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உறவினர்களின் வருகை உண்டு.
மனையில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெற்றோர் நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படலாம்.
வருமானம் இருமடங்காகும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சர்யப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
பயணங்களால் பலன் கிட்டும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிட்டும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களைச் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.