பொதுவாகவே மனிதனாக பிறந்த எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சிலர் மாத்திரம் பெரியளவில் கடினமாக உழைக்காவிட்டாலும் அசாதாரணமாக கோடிகளில் பணம் சம்பாதிப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த ராசியினர் கோடிகளில் பணம் சம்பாதிக்கும் திறமை கொண்டிருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே தலைமைத்துவ பண்புகள் மற்றும் சம்பாதிக்கும் ஆற்றல் என்பன அமைந்திருக்கும்.
வியாபரம் சம்பந்தமாகவும் நிதி முகாமைத்துவம் தொடர்பாகவும் இவர்கள் அதிகம் சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இந்த குணங்கள் இவர்களை கோடிகளில் பணம் சம்பாதிக்க தூண்டுகின்றது.
சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். இது அவர்கள் தங்கள் தொழிலில் முன்னேறுவதற்கு மிகவும் துணைப்புரியும்.
இவர்களின் வசீகர பேச்சு மற்றும் தன்னம்பிக்கை காரணமாக லாபகரமான வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். இவர்கள் பிறப்பிலேயே கோடிஸ்வர யோகம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் தான் இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆழமான வேரூன்றிய உணர்வுகள் மற்றும் உள்ளார்ந்த வளம் ஆகியவற்றால் பல தடைகளை கடந்து, தங்கள் முயற்சியில் வெற்றி பெறும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
வியாபார ரீதியில் இவர்கள் புத்திசாலித்தனமான வணிக முடிவுகள் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். இவர்களுக்கு கோடிகளில் பணம் சம்பாதிக்கும் திறமையும் அதனை சேமித்து வைக்கும் திறமையும் இயல்பாகவே அமைந்திருக்கும்.








































