இலங்கையில் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டம் தெரணியகலை பிரதேசத்தில் நேற்று(6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.
பணம் அச்சிடப்பட வேண்டிய நிலை
இதன்பேது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் பணம் அச்சிடப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டது. அவை எந்த சந்தர்ப்பத்திலும் உடனடியான செலவுகளுக்காக பயன்படுத்தவில்லை.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போதிய நிதியில்லாத காரணத்தினால், பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது” – என்றார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தமது கட்சி அதனை தடுத்து நிறுத்த எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.