பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு அரசியல் பேரணியில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 200 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள உள்ள பழமைவாத ஜமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சியின் கூட்டத்தில் நேற்று இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அமர்ந்திருந்த மேடைக்கு அருகாமையில் தற்கொலை குண்டுதாரி தனது வெடிமருந்து அங்கியை வெடிக்கச் செய்ததாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எல் குழு இருக்கலாம் என்றும், அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.