Loading...
முருங்கை மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், காய் ஆகிய அனைத்துமே ஒவ்வொரு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
Loading...
அதில் முருங்கைப் பூவை எப்படி எடுத்துக் கொண்டால், அதனுடைய பலனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
முருங்கை பூவின் மருத்துவ குணங்கள்
- முருங்கைப்பூ, பிரண்டை மற்றும் சிறிதளவு தேங்காய் ஆகியவற்றை சேர்த்து புட்டு அவிப்பது போல் அவித்து, அதை பிழித்து சாப்பிட்டால், கடுமையான வயிற்று வலி குறையும்.
- பாலை நன்கு காய்ச்சி அதில் முருங்கைப் பூக்களைப் போட்டு தினசரி சாப்பிட்டு வர வேண்டும். இதனால் தாது நல்ல புஷ்டி பெறும்.
- முருங்கை பூவுடன் கற்றாலைச்சாறு, வெண்ணெய், ஆகிய அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து கலந்து, அதை சாப்பிட்டு வந்தால், மேகநோய் எனும் பெண் சீக்கு குணமாகும்.
- முருங்கைப்பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும்.
- முருங்கைப்பூவை நன்றாக அரைத்து, பசுவின் பால் மற்றும் தேங்காய் பால் கலந்து, அதில் 25 கிராம் வெல்லம் சேர்த்து காய்ச்சி, லேகிய பதத்தில் இறக்கி, ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் உதிரப்போக்கு பிரச்சனை குணமாகும்.
Loading...