அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட 2023ம் ஆண்டு அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் CEO களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தவர் நிகேஷ் அரோரா.
ஐ.ஐ.டி பட்டதாரியான நிகேஷ் அரோரா தற்போது பெரும் கோடீஸ்வரர்கள் வட்டத்திலும் இணைந்துள்ளார். Palo Alto Networks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும் இந்திய வம்சாவளி நிகேஷ் அரோரா அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் நபர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
காஜியாபாத்தைச் சேர்ந்த நிகேஷ் அரோரா 1989ல் ஐ.ஐ.டி வாரணாசியில் இருந்து பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் MBA பட்டம் பெற்றவர், கூகிள் நிறுவனத்தில் சுமார் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2014ல் கூகிள் நிறுவனத்தில் இருந்து விலகி ஜப்பானின் SoftBank நிறுவனத்தில் இணைந்தார். 2018 முதல் Palo Alto Networks நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளில் மட்டும் Palo Alto Networks நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக 33.5 மில்லியன் டொலர்கள் சம்பளமாக பெற்றுள்ளார்.
2021 நிதியாண்டில் ரூ 173.4 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் 2022ல் ரூ 82.7 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். மொத்தமாக ரூ 256.1 கோடி அளவுக்கு இரண்டு ஆண்டுகளில் சம்பளமாக பெற்றுள்ளார்.
இது நாளுக்கு ரூ 35 லட்சம் என்றே கூறப்படுகிறது. மேலும், 2022ல் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நிகேஷ் அரோராவின் சொத்து மதிப்பு என்பது ரூ 8,500 கோடி என்றே தெரிய வந்துள்ளது.