இந்திய அணிக்காக அடிபட்டிருந்த போதிலும், விளையாடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த ஜடேஜாவின் புகைப்படம் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வைரலாகி வருவதால், அதைக் கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி, பல சர்ச்சைகள், மோதல்கள், காயங்கள் என முடிந்துள்ளது.
இருப்பினும் தோற்க வேண்டிய போட்டியை, இந்திய அணி எளிதாக சமாளித்து டிரா செய்துவிட்டது. குறிப்பாக அஸ்வின் மற்றும் விஹாரியின் துடுப்பாட்டத்தை இப்போது வரையும் முன்னணி வீரர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்போட்டியின் போது பண்முக ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன.
அஸ்வின் மற்றும் விஹாரி ஜோடி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போதும், இவர்களில் யாரேனும் ஒருவர் அவுட்டாகிவிட்டால், அடுத்து இந்திய அணி சரியான துடுப்பாட்ட வீரர்கள் இல்லை, பந்து வீசாளர்களே இருந்தனர்.
இதனால் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, காயத்தை பொறுட்படுத்தாமல், ஜடேஜா, துடுப்பாட்டத்திற்கு தயாராகும் வகையில், பேட் மற்றும் கிளவுஸ் அணிந்து தயாராகிக் கொண்டிருந்தார்.