ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் உயர் நீதிமன்றில் வாதத்தை முன்வைக்க நிபுணர் குழுவொன்றை அனுப்ப தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் முழு பீடத்தினால் இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி மன்னிப்பின் மூலமே விடுதலை செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.