- இந்த தினம் நோய்களை தீர்க்க செய்யும் அற்புதமான தினமாகும்.
- ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு குருவார அபிஷேகம்.
ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள். இன்று (வியாழக்கிழமை) சீதளா சப்தமி தினமாகும். இந்த தினம் நோய்களை தீர்க்க செய்யும் அற்புதமான தினமாகும்.
அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று. அதாவது ஒரு சமயம் தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுக்க முடிவு செய்தனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் உதவியால் தீய சக்தியை ஏவினர். இதனால் கடுமையான வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும், கடும் ஜூரத்துடனும், உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள். தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடம் இருந்தும், கங்கையிடம் இருந்தும் பேரொளி ஒன்று அம்மனாக தோன்றியது. அந்த அம்மனே சீதளா தேவி என்று அழைக்கப்படுகிறாள். இன்று சீதளா தேவியை பூஜை செய்து மாம்பழமும், வெள்ளரிக்காயும், தயிர் சாதமும் நிவேதனம் செய்து அவற்றை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம்.
இதனால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், அம்மை நோய் முதலான நோய்கள் விலகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரருக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம், அலங்காரம்
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கிருஷ்ணாவதாரம். வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜர் புறப்பாடு, திருவாடானை சிநேகவல்லியம்மன், ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் திருத்தலங்களில் ஊஞ்சல் சேவை. பெருமழலைக்குறும்ப நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீராகவேந்திரருக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம், அலங்காரம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு குருவார அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, ஆடி-19 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி நள்ளிரவு 1.34 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : சித்திரை மாலை 4.21 மணி வரை பிறகு சுவாதி
யோகம் : சித்த / அமிர்த யோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் – உற்சாகம்
ரிஷபம் – புகழ்
மிதுனம் – மகிழ்ச்சி
கடகம் – மேன்மை
சிம்மம் – விவேகம்
கன்னி – சுகம்
துலாம் – நற்செய்தி
விருச்சிகம் – தனம்
தனுசு – பாராட்டு
மகரம் – ஆர்வம்
கும்பம் – உறுதி
மீனம் – திடம்