Loading...
கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பஸ் தொடர்பாக தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு, பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நேற்றையதினம் (03) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டனர்.
Loading...
ஊழியர்களின் தவறான நடத்தை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பஸ் போக்குவரத்து சேவைக்கான அனுமதி இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
மேலும், சாரதியும் நடத்துனரும் ஒரு மாத காலத்திற்கு சேவையிலிருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
Loading...








































